Thursday, 26 January 2012

வீதிச் சறுக்கு: இது விளையாட்டல்ல!


"கிணற்றுள் எச்சில் துப்பாதே-பின்னர் அதையே நீ குடிக்க நேரலாம்!" என்கிறது ஜித்திஷ் பழமொழி.

இதற்கு, "என் வீட்டில் கிணறே இல்லையே; அப்புறம் எப்பூடி..." என்று வடிவேலு பாணியில் கேள்வி கேட்கும் நகரத்துவாசிகளுக்கும், "ஐயையோ! கிணற்றுக்குள்ளா...? "என்று அவசரமாக மறுக்கும் கிராமத்துவாசிகளுக்கும்தான் இந்தக் கட்டுரை!

"பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது" என்று பள்ளியில் நமக்கு அன்போடும் அக்கறையோடும் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.கல்லூரிக் காலத்தில் அது தொடர்பாக பலவற்றைப் பேசிப் பகிர்ந்து, தீமைகளை உணர நிதானமான வாய்ப்பு நிறையவே இருந்திருக்கிறது.

இவ்விரண்டு காலத்துக்கும் பின்னர், அவசர அவசரமாக வேறொரு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம்.முன்பு அன்பாகவும் அமைதியாகவும் சொல்லித் தரப்பட்ட அதே கருத்து, இப்போது நமக்கான எச்சரிக்கையாகி அச்சுறுத்துகிறது.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் "இங்கே எச்சில் துப்ப வேண்டாம்; மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்று எழுதப்பட்டிருப்பது இதற்குச் சான்று!

நின்று நிதானிக்க நேரம் இல்லாமலும், அருகில் தெரிவதை அவதானிக்க முடியாமலும் தினமும் தொடரும் நம் விரைவுப் பயணத்தில், தெருக்களின் நிறங்களை மறைக்கும் அளவுக்கு போதையூட்டப்பட்ட வெற்றிலை பாக்குக் கறைகளில் கால்கழுவியும், ஜலதோசம் பிடித்தவர்கள் உமிழ்ந்த எச்சிலில் சறுக்கியும் செல்வது சகஜமாகிவிட்டது.

இது அருவருப்பை ஏற்படுத்தும் பெருந்துன்பம் என்பதற்கப்பால், குழந்தைகள் உள்ளிட்டவர்களை கொடிய நோய்கள் சுலபமாகத் தாக்கி விடுகின்ற பாதக விளைவுபற்றிச் சிந்திக்கும் நிலையில் நாம் இல்லை.

பொது சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால், அபராதம் விதிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கனடா என்று தொடரும் பட்டியலில், அநேகமான ஆசிய நாடுகளுக்கு இடமில்லை.அதில் இடம்பெற நாம் முயன்றதும் இல்லை.

குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு ஆசிய நாடுகளில் இயங்கிவருகின்ற அரசுசார்பற்ற சில சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் வருடமொன்றுக்கு 1.95 மில்லியன் குழந்தைகள் தொற்றுநோயால் இறந்துவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவில் மட்டும் தினமும் 5,000 குழந்தைகள் டயரியா, நியோமோனியா மற்றும் சுவாசத் தொற்றுநோய்களால் இறந்துவிடுகின்றனர் என்பதும் இவர்களில் பெருமளவினர் 3-5 வயதிற்குட்பட்ட வயதினர் என்பதும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது!

இந்தத் தொற்றுநோய்கள் பல்வேறு காரணிகளால் ஏற்பட வாய்ப்புள்ளது எனினும், சுகாதாரமற்ற சுற்றுச் சூழலே தலையாய காரணி என்பது வெளிப்படை.

இந்த உலகம் வட்டமோ சதுரமோ; அதில் வாழும் நாங்கள் வட்டமடித்து வாழ்கிறோம் என்பது மட்டும் நிஜம்! வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நம் கலாச்சாரமும், பண்பாடும் பகிரப்படுகிறது அல்லது பரஸ்பரம் கவரப்படுகிறது.

இதன்போது, நல்லவை போலவே தீய பழக்கவழக்கங்களுக்கும் நாம் அடிமைகளாகிவிடுவது தன்னியல்பாகவே நேர்ந்துவிடுகிறது. போதையூட்டும் மட்டமான புகையிலைப் பழக்கம், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தாவிவந்து நெடுங்காலமாயிற்று.

அதன் விளைவுகள் பாரதூரமானவை என்று மருத்துவத்துறை எவ்வளவோ அறிவுறுத்தியபோதிலும், மோசமான அந்தப் பழக்கம் இன்னும் பரவியே வருகிறது. இதன் விளைவு, அதனுடன் தொடர்பற்றவர்களையும் குழந்தைகளையும் தாக்கி அழிக்கிறது. நமது தீய பழக்கம் நம்மோடு முடிந்துபோனால் கூடப் பரவாயில்லை. அது பிறரைத் தாக்கவும் காரணமாக உள்ளது என்பது கொடுமையல்லவா?

எனவே, குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை என்றுணர்ந்து செயற்படுவோம்! இதற்காக நாம் ஒன்றுமே செய்யத் தேவையில்லை.

மாறாக, நீங்கள் சுற்றுச் சூழலை அசுத்தமாக்கும் நடவடிக்கைகளைச் செய்யாமலிருந்தாலே போதும். இதில் முதற்படியாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்போம்!நம் தலைமுறையை நோயிலிருந்தும் இறப்பிலிருந்தும் காப்போம்!!

Wednesday, 25 January 2012

அடால்ஃப் ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்


 
COURTESY : WEBDUNIA TAMIL

உலகினமிகககொடூரமாஎதேச்சதிகாரியான, நாஜி ஜெர்மனியினஅதிபரான, அடால்ஃபஹிட்லரதனதஆரம்காலங்களிலஒரஓவியராஇருந்தாரஎன்றாலநம்முடிகிறதா? ஆம்! தீவிகலஉள்ளத்திலிருந்ததீவிஆதிக்வெறி உருவாகிவிட்டதஎன்றகலஎதிர்ப்பாளர்களஉணர்ச்சி வசப்படவேண்டாம்!

அவருமதனதகலஉள்ளத்தவெளிப்படுத்ஓவியத்தவரைந்தாரஎன்பததெரியவில்லை, ஆனாலஅப்போதஅவரிடமசல்லிகாசகிடையாதஎன்றுமஅதனாலதனவாழ்வாதாரத்திற்காஅவரஓவியமவரைந்தாரஎன்றுமகூறப்படுகிறது.

1908ஆமஆண்டஅவரவரைந்ஓவியங்களஇந்ஆண்டஏலத்திற்கவருகிறது. 1,50,000 பவுண்டுகளுக்கஅந்ஓவியங்களவிற்கப்படலாமஎன்றலண்டனிலிருந்தவெளிவரும் 'டெய்லி டெலிகிராஃப்' பத்திரிக்கசெய்தி கூறுகிறது.

ஆஸ்ட்ரியநாட்டினஒரமிகப்பெரிபண்ணையிலஇந்ஓவியங்களகண்டெடுத்தவரபெயரதெரியாஒரவழக்கறிஞர்.

மிகப்பெரிபண்ணநிலத்தைசசுற்றியுள்காட்சிகளஅவரவாட்டரகலரபெயிண்டிஙசெய்துள்ளாரஹிட்லர். சாலை, சர்ச், தொழிற்சாலைகளினவரிசஎன்றஅவரஓவியமதீட்டியுள்ளார்.

அந்தககாலங்களிலஅவரதஒரவேலவெளியசென்றஓவியமதீட்டுவதாமட்டுமஇருந்ததாமுல்லாக்ஸநிறுவனத்தினரிச்சர்டவெஸ்ட்வுடஎன்பவரதெரிவிக்கிறார். அந்தககாலக்கட்டத்திலஅவரிடமகாசபணமஇல்லஎன்றுமஅவரகூறுகிறார்.

வியன்னாவிலஉள்கல/ஓவியககழகத்திலஹிட்லரதொழில்பூர்ஓவியராவதற்காவிண்ணப்பமசெய்திருந்ததாகவும், ஆனாலஇரண்டமுறஅவரதவிண்ணப்பமஏற்கப்படவில்லஎன்றுமலண்டனநாளேடசெய்திககுறிப்பகூறுகிறது.

அப்போதஹிட்லரமனிதர்களஓவியத்திலவரையுமபோதஅவரதசிந்தனசரியாஇல்லஎன்காரணத்தினாலஅவரநிராகரித்தனரஎன்றுமகூறப்படுகிறது.

விண்ணப்பமமறுக்கப்பட்டது, அவரஒரஓவியராஏற்கப்படாததகுறித்தநிறைஆய்வுகளநடைபெற்றன. ஆனாலஅவரஓவியராஏற்றகொண்டிருந்தாலவரலாற்றிலஅவரசெய்கொடூரமும், ஜெர்மனமக்களகாலங்காலமாகுற்றவுணர்விலதள்ளியூதப்படுகொலைகளும், இரண்டாமஉலகபபோருமநடைபெறாமலகூடபபோயிருக்கலாமஎன்றுமஒரசிஆய்வாளர்களதெரிவித்துள்ளனர்.

ஓவியககழகமஒரகலைஞனஇழந்ததஎன்னவதெரியாது, ஆனாலஅவரமனுவஏற்காததுதானஅவரதமனதிலஆழமாமனிவிரோசிந்தனைகளவளர்த்திருக்குமஎன்றஒரசிலரகருதுகின்றனர்.

ஹிட்லரினஓவியங்களஇம்மாதம் 30ஆமதேதி ஏலத்திற்கவருகிறது.

Tuesday, 24 January 2012

மீண்டும் ரஞ்சி சாம்பியன் ஆனது ராஜஸ்தான்; தமிழ்நாடு அணி ஏமாற்றம்!




சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதிப் போட்ட்யில் 5ஆம் நாளான இன்று தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் 2 விக்கெட்டுகளைப் பற்கொடுக்க இரு அணிகளும் போட்டியை முடித்துக் கொண்டன. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் வெற்றி பெற்று ரஞ்சி சாம்பியன் ஆனது.

முதல் இன்னிங்சில் சக்சேனாவின் மராத்தான் இரட்டை சதத்துடன் ராஜஸ்தான் 621 ரன்களைக் குவிக்க தமிழ்நாடு அணி சரிவு கண்டது. ஆர்.ஆர்.சிங் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்த தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருமுறை நெருக்கடியில் விளையாடி 150 ரன்களைக் குவித்தார். தமிழ்நாடு அணி எடுத்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 295 ரன்களில் தினேஷ் கார்த்திக் 150 ரன்கள்!

ராஜஸ்தான் அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து ரஞ்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ராஜஸ்தான் அணிக்கு ரூ.2 கோடிக்கான காசோலையும், தமிழ்நாடு அணிக்கு ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு தமிழ்நாடு அணி கட்டாய ஓவர்களில் சிலவற்றை எதிர்கொண்டது. 13 ஓவர்கள் விளையாடிய தமிழ்நாடு 8 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை வேறு பறிகொடுத்தது.

சமீப காலங்களில் கேப்டன்சி பற்றி பேச்சு அடிபட்டு வருகையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ராஜஸ்தான் அணியை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ரிஷிகேஷ் கனிட்கர் தலமை மிகுந்த பாராட்டுதலுக்குரியதாகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷில் கடைசி பந்து பவுண்டரி அடித்து புகழ்பெற்ற வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த இந்த வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு துரதிர்ஷ்டவசமாக விரைவில் முடிவுக்கு வர தற்போது சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் கேப்டன் என்று நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் ராஜஸ்தான் அணியை வழிநடத்திக் காட்டியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு கனிட்கரை அவரது சொந்த மாநில கிரிக்கெட் வாரியமான மகாராஷ்டிரா கண்டு கொள்ளாமல் விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சு புதுமுகமான ரிதுராஜ் சிங் இந்த மட்டை ஆட்டக்களத்திலும் சிறப்பாக வீசியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் யார் எனில் தென் ஆப்பிரிக்காவின் மறக்கப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெரிக் பிரிங்கிள் என்பது குறிப்பிடத்தக்கது பந்து வீச்சு ஆக்ரோஷமாக மாறியதற்கு இவரது பங்களிப்பும் அதிகம் என்று ராஜஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேப்டனால் டைட்டானிக் விபத்து!

COURTESY : WEBDUNIA TAMIL
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என்ற புதுத் தகவல் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் "டைட்டானிக்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான பிறகே உலகில் பலருக்கு, டைட்டானிக் என்ற ஒரு ஆடம்பர மற்றும் பிரமாண்டமான கப்பல் தயாரிக்கப்பட்டதும், அந்த கப்பலின் முதல் பயணமே விபத்தில் முடிந்ததும் பற்றிய தகவலே தெரிந்தது.

1912 ல் இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் ஹாம்ஷிர் என்ற நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரான சவுதாம்ப்டனிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பயணித்த டைட்டானிக் கப்பல், வேகமாக சென்றதாலும், எதிரே பனிப்பாறையை அக்கப்பல் கேப்டன் கவனித்து சுதாரிப்பதற்குள் அதில் மோதியதாலும் உடைந்து மூழ்கியதாகவே இதுநாள் வரை ஆண்டாண்டு காலமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், விபத்துக்கு அந்த கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக செலுத்தியதே காரணம் என்று புதுத் தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது லண்டனில் வெளியாகி உள்ள " குட் அஸ் கோல்ட்" ( Good as Gold ) என்ற புத்தகம்!

"கப்பல் பனிப்பாறையில் மோதிவிடாமால் தவிர்க்க நிறைய நேர அவகாசம் இருந்தது. ஆனால் கேப்டன் பீதியடைந்து பதற்றத்திலும், அவசரத்திலும் தவறான பாதையில் கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அந்த நேரத்தில் அந்த தவறு நிகழாமல் சரி செய்திருக்கலாம். ஆனால் விபத்தை தவிர்ப்பதற்கு கேப்டன் சுதாரிப்பதற்குள் காலம்கடந்து, பனிப்பாறையில் மோதியதால் அந்த மாபெரும் டைட்டானிக் கப்பலில் ஓட்டை விழுந்து, கடல் தண்ணீர் உள்ளே புகுந்து நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது.

மேலும் பனிப்பாறையில் மோதி கப்பலில் ஓட்டை ஏற்பட்டபோதிலும், கப்பலை தொடர்ந்து செலுத்தாமல், அப்படியே நிறுத்தி வைத்திருந்தால் கூட அதில் பயணித்த பயணிகளையும், கப்பல் சிப்பந்திகளையும் காப்பற்றியிருக்கலாம். ஆனால் கப்பலை நிறுத்துவதற்கு பதிலாக, தொடர்ந்து செலுத்த முயற்சித்ததால், கப்பலின் உடைந்த பகுதி வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து விட்டதாக" கூறி நமது அதிர்ச்சி டெசிபல்- ஐ கூட்டுகிறது அப்புத்தகம்!

இதுநாள் வரை இப்படி ஒரு தவறு நிகழ்ந்தது தெரிய வராமல் இருந்த நிலையில், அந்த கப்பல் விபத்தில் தப்பி பிழைத்த சார்லஸ் லைட்டாலர் என்ற மூத்த அதிகாரி ஒருவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 

சரி... இதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சார்லஸ், டைட்டானிக் கப்பல் விபத்து தொடர்பாக நடந்த இரண்டு கட்ட விசாரணைகளில் ஆஜரானபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டால், தனது மற்றும் தனது சக பணியாளர்களின் வேலை பறிபோய்விடுமே என்ற பயம் காரணமாகவே விசாரணைக் குழுவிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறுகின்றார் சார்லஸின் பேத்தியும், மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருப்பவருமான லூஸி பேட்டன்!

கப்பல் கேப்டன் அந்த முட்டாள்தனத்தை செய்யாமல் இருந்திருந்தால் , பனிப்பாறையில் கப்பல் மோதாமல் எளிதில் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு மைல் தொலைவில் இருக்கும்போதே பனிப்பாறையை கப்பலின் முதல் நிலை அதிகாரி வில்லியம் முர்டோச் பார்த்துவிட்டார். உடனடியாக அவர் இது குறித்து கப்பலை ஓட்டிக்கொண்டிருந்த ராபர்ட் ஹிட்ச்சின்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பதற்றமடைந்த ராபர்ட் கப்பலை இடதுபுறமாக திருப்புவதற்குப் பதிலாக,வலது புறமாக திருப்பினார். உடனே நடந்துவிட்ட தவறை உணர்ந்த வில்லியம், கப்பலை சரியான பாதையில் செலுத்துமாறு அப்போதுகூட எச்சரித்தார். அதனைக் கேட்டு ராபர்ட் சுதாரிப்பதற்குள் கப்பல் பனிப்பாறையில் மோதியேவிட்டது.

கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புக தொடங்கியும் கூட, கப்பலை நிறுத்தாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கப்பலை செலுத்தியுள்ளார் கேப்டன். இதனால்தான் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

கூடவே டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மேவும், தனது கப்பல் கம்பெனியின் பெயர் கெட்டுவிடுமே... லட்சக்கணக்கான டாலர்களை கொட்டி உருவாக்கிய தனது கப்பல் முதலீடு போய்விடுமே என்று பயந்து, கப்பலை தொடர்ந்து ஓட்டிச் செல்லுமாறு கேப்டனுக்கு உத்தரவிட்டுள்ளார்.கப்பல் மூழ்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

" கப்பலை தொடர்ந்து செலுத்தாமல் அப்படியே நிறுத்தியிருந்தால், கப்பல் தொடர்ந்து மிதந்தபடியே நின்றிருக்கும்; நான்கு மணி நேர பயண தொலைவிலேயே வந்து கொண்டிருந்த மற்றொரு கப்பலிலிருந்து உதவி கிடைத்திருக்கும்" என்றும் தனது தாத்தா ஆதங்கப்பட்டதாக அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூஸி!

Monday, 23 January 2012

அயோத்தி வழக்ககின் தீர்ப்பு

COURTESY : TAMIL WEBDUNIA
பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது: நீதிபதி எஸ்.யு. கான்  
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. 


அயோத்தி வழக்கிலஇன்றமதியமதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது. இதிலசர்ச்சைக்குரிபாபரமசூதி பகுதி 3 பாகங்களாகபபிரிக்கப்பட்டஇஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றுமஅறக்கட்டளையாநிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குசசொந்தமானதஎன்றதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது.

இந்தத்ததீர்ப்பவழங்கிய 3 நீதிபதிகளிலஒருவராசுதிரஅகர்வாலஅவர்களினதீர்ப்பினமுக்கிஅம்சங்களிலசிவருமாறு:

1. சர்ச்சைக்குரிஇடத்திலமையககூரையினகீழஉள்பகுதி இந்துக்களினமதநம்பிக்கைகளினபடி ராமரபிறந்இடமே.

2. சர்ச்சைக்குரிபகுதி எப்போதுமமசூதி என்பதாகவஎடுத்துககொள்ளப்பட்டநம்பப்பட்டவருகிறது. இதனாலமொகமதியர்களஇங்கவழிபாடசெய்துவந்தனர். இருப்பினுமஅதபாபரால் 1528ஆமஆண்டுதானகட்டப்பட்டதஎன்பதநிரூபிக்கப்படவில்லை.

3. இதகுறித்மாற்றகோரிக்கைகளோ, வேறதடயங்களோஇல்லாபட்சத்திலசர்ச்சைக்குரிஅமைப்பஎப்போதயாராலகட்டப்பட்டதஎன்பதஉறுதி செய்முடியாது. ஆனாலஜோசபடைஃபென்தாலரஎன்பவரவருவதற்கமுன் 1766 - 1771 ஆமஆண்டுகளிலகட்டப்பட்டதஎன்பதவரதெளிவாஉள்ளது.

4. சர்ச்சையிலஉள்இந்கட்டிடம், அதற்கமுன்பஅங்கிருந்இஸ்லாமஅல்லாசமயககட்டிஅமைப்பைததகர்த்துககட்டப்பட்டுள்ளது. அதாவதஇந்துககோயில்.

5. சர்ச்சையிலஉள்கட்டிடந்த்தினமையக்கூரையினகீழ்ப்பகுதியிலவிக்ரகங்களடிசம்பர் 1949ஆமஆண்டு 22 மற்றும் 23ஆமதேதி இரவிலவைக்கப்பட்டது.

அது இராமர் பிறந்த இடமே: நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு  

அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு:

1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா?

தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது.

இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. அது வடிவமற்றதாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வணங்குபவரின் பிரார்த்தனைக்கேற்ப உருவமாகவும் வரக்கூடியதாகும்.

2. தகராறுக்கு உட்பட்ட அந்த கட்டடம் ஒரு மசூதியா? அது எப்போது, யாரால் கட்டப்பட்டது?

தீர்ப்பு: தகராறுக்கு உட்பட்ட அந்தக் கட்டடம் பாபரால் கட்டப்படது. எந்த ஆண்டில் என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஆனால் அது இஸ்லாத்தின் நெறிகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. எனவே அது மசூதி என்பதற்குரிய தகுதியை பெற்றிருக்க முடியாது.

3. அங்கிருந்த ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்த மசூதி கட்டப்பட்டதா?

தீர்ப்பு: ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கட்டுமானத்தை தகர்த்தப் பின்னரே தகராறுக்குட்பட்ட இந்தக் கட்டடம் (பாபர் மசூதி) கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுமானம் ஒரு ஹிந்து மதம் தொடர்பானது என்று இந்திய தொல்லியல் துறை நிரூபித்துள்ளது.

4. அந்தக் கட்டத்திற்குள் இராமர் உள்ளிட்ட சிலைகள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் வைக்கப்பட்டதா?

தீர்ப்பு: தகராறுக்குட்பட்ட அந்த கட்டடத்தின் நடுக் கூரைக்குக் கீழே 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

5. தகராறுக்குட்பட்ட அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடும் மனுக்கள் ஏதேனும் அதற்குரிய கால வரையறையைத் தாண்டியவையா?

தீர்ப்பு: 1989ஆம் ஆண்டு உ.பி. மாநிலம், லக்னோ சுன்னி மத்திய வக்்ப் வாரியம் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராக கோபால் சிங் விஷாரத் மற்றும் பலர் ஆகியோர் தொடர்ந்த மனு ஒ.எஸ்.எஸ். எண் 4,
1989ஆம் ஆண்டு நிர்மோஹி அஹாரா மற்றும் ஒருவருக்கு எதிராக ஜமுனா பிரசாத் சிங் மற்றும் பலர் தொடுத்த மனு ஓ.எஸ்.எஸ். எண் 3 ஆகியன காலம் கடந்தவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன.

6. தகராறுக்கு உட்பட்ட கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி தொடர்பான நிலை என்ன?

தீர்ப்பு: இந்த தகராறுக்கு உட்பட்ட இடத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் இராம் சந்திர ஜி பிறந்த இடமும், சரண், சீதா ரசோய் ஆகியனவும், வழிப்படப்படும் மற்ற சிலைகளும், பொருட்களும் ஹிந்துக்களுக்கே உரியவை. நினைவிற்கு எட்டாத காலம் முதலே தகராறுக்குரிய அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தகராறுக்குட்பட்ட கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னர் அந்த இடத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22,23ஆம் தேதிகளுக்குட்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தகராறுக்குட்பட்ட இடத்தின் வெளிப்பகுதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதும். வெளியேயும், தகராறுக்கு உட்பட்ட உள்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகராறுக்குட்பட்ட கட்டுமானம் (பாபர் மசூதி) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை மசூதி என்று ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதி தரம் வீர் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Sunday, 22 January 2012

அந்நிய முதலீடு வரத்து வளர்ச்சியா? வினையா?

இந்தியாவின் பங்குச் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களால் செய்யப்படும் முதலீடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறதா அல்லது பொருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதித்து வீழ்ச்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி பொருளாதார வட்டாரங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உரையாற்றியுள்ள இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ஆர்.வி. சுப்பா ராவ், அந்நிய முதலீட்டு வரத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறுகிய கால நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைகளிலும் கடன் பத்திரங்களிலும் ஒரு அளவிற்கு அதிகமாக அந்நிய முதலீடு என்பது கவலைக்குறியது என்கிற உலகளாவிய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஒட்டியே சுப்பா ராவின் கருத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அந்நிய முதலீட்டு வரத்து ஒரே நேரத்தில் மிக அதிகமாக வருவதும், ஒரு நேரத்தில் வெளயேறுவதும் நாட்டின் பெருளாதார நிலைத்தன்மையை பாதிக்கும் என்றால், அப்போது (இந்திய மைய வங்கி) தலையிட்டே தீரும். நாங்களும் தலையிடுவோம். ஏற்றுமதி - இறக்குமதி அடிப்படையிலான நடப்பு கணக்கில் உபரி உள்ள பொருளாதார நாடுகளே தலையிடும்போது, இந்தியாவைப் போன்ற பற்றாக்குறை உள்ள நாடு தலையிடாமல் இருக்க முடியாது” என்ற பொருளில் சுப்பா ராவ் பேசியுள்ளார்.

இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) இதுவரை 22 பில்லியன் டாலர்களை (சற்றேறக்குறைய ரூ.10,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியாவின் கடன் பத்திரங்களில் 10 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இந்த அளவிற்கு இவர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யக் காரணம், தங்கள் (வளர்ந்த) நாடுகளில் வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் வட்டியை விட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யக் கூடிய முதலீடுகளில் அதிக வருவாய் கிட்டுகிறது என்பதே.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் இந்த முதலீடு பங்குச சந்தை வர்த்தகத்தை விறுவிறுப்பாக்கினாலும், அது இந்தியாவின் பெருளாதாரத்தை வேறு விதத்தில் பாதிக்கிறது. மிக அதிக அளவிற்கு வரும் முதலீடுகளால் பங்குகளின் விலையேற்றம் தாறுமாறாக உயர்கிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளின் எதிரொலியால் அவர்கள் மிகப் பெரிய அளவிற்கு பங்குகளை விற்கும்போது தாறுமாறாக சரிவையும் ஏற்படுத்துகிறது. இது பங்குச் சந்தையில் ஒரு எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்களை பாதிக்கிறது.

மற்றொரு வகையில், பெரிய அளவிற்கு டாலர் வரத்தால், அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு குறைகிறது. இது நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களை பாதிக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதிக்கு செலாவணி மாற்றில் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் ஆளாவதால், அவர்கள் வேறு நாட்டு சந்தைகளை பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இப்படி ஒரு விதத்தில் சாதகமாகத் தெரியும் அயல் நாட்டு முதலீடுகள், மற்றொரு வகையில் நாட்டின் பெருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதிக்கின்றன. இதனைத் தடுக்கவே, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்நிய முதலீடு வந்தால் அதன் மீது மூலதன வரி விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வழிமுறையை மெக்சிகோ, தென் கொரிய நாடுகள் கடைபிடிக்கின்றன.

இதைத்தான், இந்திய மைய வங்கியின் ஆளுநர் சுப்பாராவ், “நாங்களும் தலையிடுவோம” என்று கூறியுள்ளதன் பொருளாகும்.

ஆனால், சுப்பா ராவின் கருத்திற்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. வாஷிங்டனில் அந்நிய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசுகையில், “அந்நிய முதலீடுகளால் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை, இப்படிப்பட்ட காரணிகளைக் கருத்தில்கொண்டு தடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் குறுகிய காலத்தில் எதிர் வினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.

அந்நிய முதலீட்டு வருகவெள்ளத்தால் “இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஒன்றும் இப்போது இல்லை. முதலீட்டு வருகையும் வெளியேற்றமும் பெரிதாக ஏற்படவும் இல்லை. அது எங்களது சந்தை மன நிலையை பாதிக்கவும் இல்லை. எனவே அந்நிய முதலீட்டு வருகைக்கு உச்சரவரம்பு விதிக்கும் அவசியம் ஏதுமில்லை” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் சந்தைகளில் வளர்ந்த நாடுகளின் நிறுவன முதலீட்டாளர்கள் மேலும் 825 பில்லியன் கோடி (ரூ.37,12,500 கோடி) முதலீடு செய்யவுள்ளனர் என்று சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட முதலீட்டு வருகையால் ஏற்படும் பாதிப்பு என்ன? “வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாயை விட, வளரும் நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாய் அதிகம் என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கி அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவிகின்றன. இது நமது நாணய மதிப்பு மேலாக உந்தித் தள்ளுவதோடு, பெருளாதார நிலைத் தன்மையை சிக்கலாக்குகிறது. அதன் காரணமாக பணவீக்கம், வளர்ச்சி, நாணய கொள்கை ஆகியவற்றை கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று சுப்பா ராவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உருவான வீட்டுக் கடன் நிதி ஆளுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உருவான பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவும், அதனை மிகவும் சார்ந்துள்ள பொருளாதாரங்களான ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றையும் பெருமளவிற்குப் பாதித்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பெருமளவிற்கு நோட்டை அச்சடித்து சுழற்சியில் விடுகின்றன. அவைகள் முதலீடுகளாக வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கிப் பாய்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட முதலீட்டு வரவை வரவேற்கும் ஒரே நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி உள்ளார்!

அந்நிய நிறுவன முதலீடுகள் மேலும் வருவதற்கு ஏதுவாக, இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை இரு மடங்களாக உயர்த்தி 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய வழியேற்படுத்தியுள்ளார். இந்திய நாட்டின் பெரு நிறுவனங்களின் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் உச்சவரம்பை இதே அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு அந்நிய முதலீட்டை கிரகிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அதனை அனுமதிக்க வேண்டும். அந்த வரையறையை தாண்டும்போது கட்டுப்பாட்டு அவசியமானது என்று நிதி ஆலோசனை அமைப்புகள் கூறுகின்றன.

இதனையெல்லாம் உணர்ந்தவராக உள்ள மைய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கையுடன் பேசுகிறார். ஆனால், நமது நாட்டின் நிதியமைச்சரோ, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய முதலீடுகளால் மட்டுமே சாத்தியமாகும் என்பதுபோல் பேசி வருகிறார்.

அமெரிக்காவீன் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லீமென் பிரதர்ஸ் சரிந்து விழுந்ததையடுத்து உருவான சங்கிலித் தொடர் வினைகளால் அந்நாட்டு பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு பெரும் ‘மாற்றம்’ நிகழ்ந்தால் மட்டுமே நமது நாட்டு அரசும் விழித்துக்கொள்ளுமோ என்னவோ?

Wednesday, 18 January 2012

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?




Husband and wife
உங்கள் கணவரை உங்கள் கைக்குள்வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.

கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..

காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.

கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.

கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.

கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.

உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை...!

Monday, 16 January 2012

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?



Mom in law and Daughter in law
இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்....அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!

நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.

நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர் வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா? அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள் நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.

Sunday, 15 January 2012

மனைவியை காதலிப்பது எப்படி?






கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார்.

அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார். திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.